world

img

கொலம்பியாவின் அதிபராக கஸ்டாவோ பதவியேற்பு

கொலம்பியாவின் அதிபராக கஸ்டாவோ பெட்ரோ பதவி ஏற்றுக் கொண்டார்.

கொலம்பியாவில், கடந்த ஜூன் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கஸ்டாவோ பெட்ரோ அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொலம்பிய அதிபராக கஸ்டாவோ ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். கொலம்பியா நாட்டின் முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பெட்ரோ உள்ளார். 

பதவியேற்பின் போது பேசிய பெட்ரோ, நாட்டில் அமைதியை கொண்டு வரவும், சமத்துவமின்மையை எதிர்த்தும், ஆயுதங்கள் மற்றும் போதை பொருளுக்கு எதிராக போராடுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
 

;